பலபொழுது எண்ணியதுண்டு தோழி
நீ என் கைச்சிறைக்குள் இருக்கும்போதும்
எங்கோ நானறியா தொலைவில் இருப்பதாய்
என்னை முற்றும் அறிந்தவள் நீ - உன்னை
சற்றும் நெருங்கி அறியமுடியாதவன் நான்
தொலைவிருக்கையில் பெண் என ஒருமை கொள்கிறாய்
அருகணைகையில் அன்னை தோழி என இருமைகொள்கிறாய்
அறிவுரைக்கையில் அன்னை அணைத்திருக்கையில் தோழி
வெல்லமுடியாதவள் நீ ! ஆனால் தினமும் வெல்ல வாய்ப்பும் தருபவள்
ஒளியது நாடி உயிர்தரும் அந்தென உனைநோக்கி எனை ஈர்ப்பதும் அஃதே
- குமரன் (20/03/2019)
No comments:
Post a Comment