எச்சில் வழிய என் விரல் பற்றும்
சிறுமகவின் தொடுகையில்
பனி உறங்கும் புற்களின் மேல்
வெறும் காலில் நடக்க வரும் சில்லிடலில்
ஜன்னலை முத்தமிடும் மழையோசையைக்
கேட்டபடி பருகும் சூடான தேநீரில்
மழை ஓய்ந்த பின் மண்வாசனையை
நுகர்ந்தபடி செல்லும் குறுநடையில்
நட்சத்திரங்கள் நிறைந்த வானை ரசித்தபடி
கொள்ளும் மொட்டைமாடி உறக்கத்தில் என
எனைச் சுற்றி எங்கும் மகிழ்ச்சியே.
- குமரன் (04/05/2019)
No comments:
Post a Comment