கவிஞர் பலர் பெண்களை நிலவென்பர்
ஆனால் என் இணையவளே நீ நிலவல்ல - காரணம்
எவர் எண்ணத்தை பிரதிபலிப்பவள் இல்லை நீ
ஒளியெனத் துலங்கும் சுயமதி கொண்டவள்.
எவர் சார்ந்தும் உன் இயக்கம் இல்லை
உன் ஈர்ப்பாலே என் உலகு சுழல்கிறது
யாருக்கும் நீ காட்டும் முகம் ஒன்றே
உன் புறத்தே இருள் முகம் என ஏதுமில்லை
ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்திருப்பாய்
உன்னுள் நுழைந்து அதை அறிந்தவர் எவருமிலர் - ஆகவே
என்னவளே நீ வளர்ந்து தேயும் நிலவல்ல ஒளி குன்றாச் சூரியன்
- குமரன் (03/05/2019)
No comments:
Post a Comment