கந்தர் அநுபூதியில் இருந்து ஒரு பாடல் தற்செயலாக என் கண்ணில் பட்டது. "பணியா? என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே" என்ற ஒரு வரிய படிச்சவுடன் என் திருமணமான நண்பர்கள் எல்லாம் ஞாபகம் வந்தார்கள். முருகன் வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று கெஞ்சுகிறான். ஆனானப்பட்ட முருகனுக்கே அந்த நிலைமை என்றால் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன் ஒரே சிரிப்பு சிரிப்பா வந்திருச்சு 😂🙊 அப்புறம் எனக்கும் நாளைக்கு இந்த நிலைமை தான் என்று ஒரு எண்ணம் வந்தது உடனே இன்னும் சிரிப்பு வந்துவிட்டது😁
Wednesday, 24 August 2022
Visual Poetry
வியனுலகு வதியும் பெருமலர்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகை செய்தாய்!
என் மனது உன்னடி விட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய்
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
Sunday, 21 August 2022
Malayalam Is The Most Beautiful Daughter Of Tamil
இரவுமழை!
இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்
உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன்
உன் கருணையும்
அடக்கிக் கொண்ட சீற்றமும்
இருளில் உன் வருகையும்
தனிமையின் விம்மல்களும்
விடியும்போது முகம்துடைத்து
திரும்பிச் செல்லும் உன் அவசரமும்
ரகசியப் புன்னகையும் பாவனைகளும்
எனக்குத் தெரியும்
எப்படி அறிகிறேன் என்கிறாயா
தோழி!
நானும் உன்னைப் போலத்தான்.
இரவுமழை போலத்தான்.
- மலையாளக் கவிஞர் சுகதகுமாரி
Subscribe to:
Posts (Atom)