Wednesday, 31 May 2023

Advice for Sinhala-Buddhist nationalists

Listen up, Sinhala-Buddhist nationalists, because I've got a hilarious newsflash for you. Your self-proclaimed Sinhala intellectuals are spreading the idea that even entertaining the notion of power sharing is like bestowing upon the Tamils a luxurious, VIP favour, all while leaving the poor Sinhalese in the dust! But what your brainiacs fail to grasp is that power sharing is not just important to the Tamils, it's actually more important to the Sinhalese. Talk about a plot twist! Sri Lanka's post-independence policy was all about making the Tamils suffer while the Sinhalese got a free pass. This tremendously backfired on your face when Tamils took up arms against discrimination. Then your brilliant plan seemed to be, "Who cares if the Sinhalese lose an eye, as long as the Tamils lose both their eyes!"But little did you know, karma had a hilarious surprise waiting for you. It turned out that your "genius" plan backfired, and the Sinhalese ended up losing both their eyes too. Ouch! That's gotta sting! Today, our beloved country is walking around with its begging bowl in hand, asking for a little help.

You had this brilliant idea: "Tamils are our sworn enemies! We must safeguard the Sinhalese nation, language and culture from them!" And guess what? The majority of Sinhalese folks just sat there, some even clapping their hands in excitement, while the Tamils faced oppression. But your master plan ended up doing the exact opposite of what you intended! Today, the economy takes a nosedive, and as a result, several hundred thousand Sinhalese dudes and dudettes pack their bags and search for greener pastures abroad. Their kids will be growing up in some far-off land, struggling to pronounce "ayubowan" or completely clueless about the awesomeness of traditional Sinhalese customs. It's like a disappearing act, poof! This is the magnificent outcome of your grand plan to bring back Sri Lanka's Sinhala-Buddhist glory! It is nothing short of enraging that any educated Sinhalese would choose to support Sinhala-Buddhist nationalists. Such individuals, in my eyes, are simply fools parading around with their degrees, devoid of any genuine education or intellect. 

Unlike our dear Sinhalese counterparts, Tamil identity, language, and culture don't rely solely on the future of Sri Lanka. Tamils aren't confined to Sri Lanka alone. They've spread their wings and made their presence known in multiple countries. We're talking about close to a million or more Tamils chilling in four nations and more than 100,000 Tamils in 16 other countries. Tamil communities can be found in approximately 180 countries. So, unlike a Sinhalese wherever a Sri Lankan Tamil goes now, their offspring have all the opportunities in the world to keep their Tamil identity intact. They've got Tamil language schools and fine arts institutes in every major country around the world, ready to keep their culture thriving.

Sinhala-Buddhist nationalists trying to turn Sri Lanka into a solely Sinhala-Buddhist nation is nothing short of a hilarious fantasy. Both the Tamils and Sinhalese have equal historical claims to call it home, you know!  Oh, and let's not forget the whopping population of approximately 2.3 million Sri Lankan Tamils within the country itself. You can't just wave a magic wand and make them disappear, no matter how hard you try. Just think about the economic powerhouses like Singapore, Malaysia, and India, where the Tamil community is recognized and valued as friends rather than enemies bringing about some pretty impressive economic outcomes. Now that's what I call a power move! They're proof that embracing diversity leads to progress. Take notes, folks!

To all, you Sinhala-Buddhist nationalists out there, go ahead and continue pushing your agendas, but let's be real here. Before you roll the dice again, maybe take a moment to consider the absurdity of the situation. Tamils have reached the point where they've got nothing to lose except their lives, while the Sinhalese have everything on the line. This is a lopsided gamble! You are just engaging in a conflict you can never win, risking everything you got. 

Any person who approaches this matter with a logical mindset and a solid understanding of world history would recognize the inherent risks and negative consequences associated with engaging in such a conflict. The potential outcomes of such a conflict are limited to two possibilities: impeding the progress of the Sinhalese community in the best-case scenario or leading to the complete collapse of Sinhalese civilization in the worst-case scenario. Innocent Sinhalese people simply desire to live in a prosperous homeland with happiness and peace. Your actions only serve to jeopardize that. 

Once upon a time, before borders became a thing, civilizations were doing their thing, chilling without any divisions. Then along came the British, leaving us with these boundaries we're all stuck with now. Back in the day, Sri Lanka was buddy-buddy with Tamil Nadu, part of the Madras Presidency of British India. Imagine if the British had just left it like that. Sri Lanka would be part of India, and both Tamils and Sinhalese would be swallowing Hindi whether we liked it or not.

Oh, I can already predict the heroic proclamation about to burst forth from your lips! "We are the proud offspring of Dutugemunu and Vijayabahu, invincibility runs through our veins!" But here's the hilarious truth: back in his day, everyone had swords and shields. Nowadays, if we were pitted against a technologically superior opponent, we'd be as helpless as a squirrel trying to outrun a cheetah!" Don't forget what happened when European colonizers came to our shores armed with fancy ships, cannons and muskets. 

Sri Lanka's independence is just a blip in history's eye. Seventy-odd years? In the grand scheme of history, that's just a blink of an eye. So, let's keep it real and remember that the world keeps turning, history has seen bigger things, my friends. Will you choose the path of reason, or will you keep pushing your luck and end up being the punchline of this tragicomedy? Only time will tell.

Hey there, my moderate Sinhalese friends, let me drop a truth bomb on you: The secret recipe for a prosperous Sri Lanka is mixing all the ingredients of power-sharing in a giant cauldron, stirring it with unity, and simmering it on the stove of cooperation. Power sharing is not synonymous with dividing a country; it does not involve giving undue preference to one group over another or promoting favouritism. Rather, it is a mechanism through which a country with diverse ethnicities can peacefully coexist, ensuring harmony and stability for all. It recognizes the importance of granting decision-making power and the ability to govern one's own life to every ethnicity, rather than solely concentrating it in the hands of the majority. In this way, power-sharing promotes inclusivity, equality, and a harmonious society.

It's time to roll up your sleeves, put on your superhero capes, and do this for our beloved motherland! If the mighty lions and fierce tigers join forces and let out a thunderous roar together, there's no stopping Sri Lanka! With our combined strength, wit, and charm, there's no challenge too big and no stage too grand for us to conquer.

Sunday, 7 May 2023

பிறந்தநாள் வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் எழுதிய மரபுக் கவிதை. இது அறுசீர் விருத்தம் என்ற வகைமையுள் வரும் கவிதை. தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் கொண்டு அமையும். மோனை வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.


காரையம் பதியில் தோன்றி

    கவின்சுவிஸ் வாழ்க்கை கண்டு

பாரையும் விண்ணும் சேர்த்து 

    பண்பினால் ஆளும் அண்ணன்

மோரையும் ஒத்த வண்ண 

    மனதினை கொண்ட மன்னன்

சீரையும் சிறப்பும் கண்டு 

    செகந்தனில் நிறைக மாதோ!


- குகதாசன் குமரன் (06/05/2023)

சருகுகளின் கூச்சல்

பொன்னியின் செல்வனுக்கு எதிராக பலவகையான சார்புநிலை கொண்ட கும்பல்கள் அரைவேக்காட்டுதனமான விமர்சனங்களையும், காழ்ப்புக்களை வைத்து கொண்டே இருக்கின்றனர். விரிவான வரலாற்றுப்  புரிதல் இல்லாமல் ஒற்றைப்படையான வரலாற்று புரிதல் கொண்ட பிராமண எதிர்ப்பு குழு, புலிக்கொடியை நன்கு தூக்கி காட்டவில்லை, ராஜராஜன் புத்த பிக்குகள் முன் பம்முகிறார் என்று தமிழ்த் தேசியக்  குழு, பாடல்களில்  இந்துஸ்தானி ராகத்தை பாவித்துவிட்டார்கள், புது இசைக்கருவிகளை பயன்படுத்திவிட்டார்கள்,  தமிழ் பழைய தமிழ் போல் இல்லை என்று தமிழ் தூய்மைவாத கூட்டம்,  பூ கட்டும் சேந்தன் அமுதனும் படகு ஓட்டும் பூங்குழலியும் சோழ அரியாசனத்தில் அமரவிடாமல் செய்துவிட்டார்கள் இது பாட்டாளி மக்களுக்கு எதிரான நுண்ணரசியல் என்று ஒரு குழு, இதெல்லாம் கூட பரவாயில்லை இந்த வருடம் வந்த வாரிசு பட வசூலை PS-2 முந்திவிட்டால் தங்கள் தலைவனின் மானம் என்னாவது என்று படத்தின் மீது காழ்ப்பை கொட்டும் ஒரு புதுக் கும்பல். 

இந்த கூட்டத்தினருக்கு கனவும், கலையும் முக்கியம் இல்லை தங்கள் தரப்பும், அரசியலும், தங்கள் சாராசரித்தனத்தை மறைக்க நான் எவ்வளவு புத்திசாலி தெரியுமா படம் எடுத்தவர்களுக்கு எனக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட தெரியல என்று காட்ட முனையும் அதிமேதாவிதனங்களும் எள்ளல்களும் தான் முக்கியம்.  அதற்காக எந்த பெருமுயற்சியையும் அழிப்பார்கள். ஒரு படத்தை பார்த்து பிடித்திருக்கிறது இல்லை என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. அபிப்பிராயம் சொல்ல உரிமை உண்டு. ஆனால் அதற்கு மேல் சென்று ஒரு கலைப்படைப்பை விமர்சிக்க, நிராகரிக்க கட்டாயம் சில தகுதிகள் தேவை என்று இந்த கும்பல்களுக்கு யார் தான் புரிய வைப்பது.

மொண்ணைத்தன விமர்சனங்களை சொல்பவர்கள் பெரும்பாலானவர்கள் நான் பார்த்தவரை படித்தவர்கள். தாங்கள் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பதாலேயே தங்களுக்கு அனைத்தையும் பற்றி விமர்சிக்க தகுதி உண்டு என்று நம்புபவர்கள். தமிழ் மரபு கொண்டாடும் கல்வி என்பது இவர்கள் படிப்பு என்று சொல்லும் பட்டப்படிப்புகள் அல்ல, அது ஒரு முழுமைக்கல்வி (holistic learning). நவீன கல்வி மூலம் இவர்கள் பெறுவது வெறும் தொழில் கல்வி. அதிலிருந்து சிலர் நுண்ணுணர்வால் எழுந்து முழுமைக்  கல்வியை நோக்கி செல்வார்கள் அவர்களே உண்மையில் கற்றவர்கள். இந்த அதிமேதாவி கும்பலை பார்த்து நான் சொல்ல ஒன்றே உண்டு “You just have degrees, don’t think you are intellectuals.” 

நிதர்சனம் தொலைக்காட்சி இயக்கத்தால் தொடக்கப்பட்ட போது அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்துக்கு கம்பவாரிதி ஐயாவும் யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒரு நாடகாசிரியரும் (பெயர் மறந்துவிட்டது) அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டம் தொடங்கிய உடனே ஒருவர் எழுந்து நிதர்சனம் என்ற பெயர் நியூமெராலஜி படி சரியில்லை மாற்றவேண்டும் என்று சொன்னார். பின் ஒருவர் நிதர்சனம் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று தொடங்கினார். இப்படி இந்த பெயர் குறித்த சர்ச்சை மாறி மாறி இரு மணித்தியாலங்கள் நடந்தது. அதுவரை பொறுமையாக ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த அந்த நாடக ஆசிரியர் எழும்பி, நான் ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னார். எல்லாரும் திருப்பி அவரை பார்க்க  அவர் அந்த கூட்டத்தை பார்த்து சொன்னாராம் “நல்லகாலம்! இயக்கம் தொடங்கின காலத்தில இப்படியான கூட்டம் ஒண்டும் வைக்கவில்லை. அப்படி வைச்சிருந்தா இண்டைவரைக்கும் இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கிறது எண்டு தான் பேசிக்கொண்டு இருந்திருப்போம் வேற ஒண்டும் நடந்திருக்காது” என்று.  இப்படி சொல்லிவிட்டு கூட்டத்தை விட்டு எழும்பி போய்விட்டார் என்று கம்பவாரிதி ஐயா அவரது நினைவுப்பகிர்வு நூல் ஒன்றில் சொல்லி இருந்தார். எனக்கு இப்போது அந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது.

வரலாறு முழுக்க இந்த கும்பல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சராசரிகள் என்பதாலே வரலாற்றில் குரலற்றவர்கள். சென்ற நூற்றாண்டுவரை உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே தான். ஆனால் இந்த சராசரிகளுக்கு இன்று சமூக வலைத்தளம் பெரும் பலத்தை கொடுக்கிறது. அவர்கள் பெரும் திரளாக ஒன்றிணைகிறார்கள். இன்று இருப்பது போல் கலை இலக்கியத்தின் மீதும் இத்தனை ஒருங்கிணைந்த தாக்குதல் வரலாற்றில் எப்போதும் நடந்திருக்காது.  

நான் மீண்டும் சொல்கிறேன் பலர் நினைப்பது போல பொன்னியின் செல்வன் ஒரு வெறும் பொழுதுபோக்கு படம் அல்ல. மிக விரிவான அழகியல் கூறுகள் கொண்ட ஒரு கலைச் சாதனை. தமிழ் சினிமாவின் ஒரு பாச்சல் என்றே சொல்லலாம். இதை தங்கள் அரசியலால், அதிமேதாவிதனத்தால், பிழைபுரிதல்களால் புறக்கணிப்பவர்கள் காழ்ப்பை கொட்டுபவர்கள் எல்லோரும் காலத்துக்கு முன் வெறும் சருகுகள் ஆனால் இந்தப்  படம் காலம் தாண்டி நிற்கும்.

ஆதலால் புல் மேய்க!

பொன்னியின் செல்வன் மீதான விவாதங்களில் நான் கனிவோடு அணுகும் ஒரே தரப்பு அந்த நாவலை முழுதும் வாசித்துவிட்டு இந்த படத்தை குறை சொல்பவர்களை மட்டும் தான். தமிழ் சூழலில் கலை இலக்கிய பயிற்சி தற்செயலாக தான் அறிமுகம் ஆகும்.  இங்கு அவற்றை அறிமுகம் செய்ய முறையான அமைப்புகள் இல்லை. எனவே பலருக்கு வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற பிரிவினை இருப்பதே தெரியாது. நானே கூட 2014 வரை பொன்னியின் செல்வன், கடல்புறா போன்ற வணிக இலக்கியங்களை தான் நவீன தமிழின் உச்சகட்ட சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  மணிரத்னம் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வணிக இலக்கியத்தை எடுத்து ஒரு கலைப் படைப்பை உருவாக்கி இருக்கிறார். 

பொன்னியின் செல்வன் படத்தை நாவலோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்ய முன்னர் எது வணிக இலக்கியம் எது தீவிர இலக்கியம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். வணிக இலக்கியம் (popular fiction) வாசகனை நோக்கி எழுதப்படுகிறது. அதில் வாசகன் தான் பிரதானம். அவனை திருப்திப்படுத்துவதே அதன் நோக்கம். உதாரணமாக பொன்னியின் செல்வனை எடுத்துக் கொள்வோம். கல்கி உண்மையில்  அதை 60 அத்தியாயம் கொண்ட நாவலாகவே எழுத நினைத்தார். ஆனால் அது வாரா வாரம் வெளியான போது பெரு வெற்றி பெற்றதால் கல்கி நிர்வாகி சதாசிவத்தின் வற்புறுத்தலால் அதை 3  வருடங்கள் நீடிக்க வேண்டியதாகி விட்டது. அதனால் தான் சேந்தன் அமுதன், மணிமேகலை என்று பல திசைகளில் அதை வளர்த்தெடுத்தார். ஏன் ஆழ்வார்க்கடியான் பாத்திரம் கூட சிறு பாத்திரமாகவே கல்கி எண்ணியிருந்தார் ஆனால் அந்த பாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால் அதை பெரிய பாத்திரம் ஆக்கினார். 'பொன்னியின் புதல்வர்' என்ற கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூலில் இவை பதிவாகி உள்ளன.

எனவே வணிக இலக்கியத்தில் வாசகனே முதன்மை. இரண்டாவதாக வணிக இலக்கியத்தை புரிந்து கொள்ள வாசகன் எதையும் கற்று வைத்திருக்க தேவை இல்லை. அது பொது வாசிப்புக்குரியது. வாசகனுக்கு புரிவது போல் எழுத வேண்டியது ஆசிரியரின் கடமை.  தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்த எவரும் பொன்னியின் செல்வனை வாசித்து விட முடியும். இதே வகைமையை சார்ந்ததே துணிவு, வாரிசு போன்ற வணிக திரைப்படமும் (Commercial Cinema). அதன் நோக்கம் ரசிகனை திருப்திப்படுத்துவது. அவனுக்கு புரிவது போல் படமெடுப்பது.  கண்ணும் காதும் ஒழுங்காக செயல்படும் எவரும்  துணிவு, வாரிசு படங்களை பார்த்துவிட முடியும்.

தீவிர இலக்கியம்(literary fiction) என்பது முற்றிலும் வேறு. அது மேலும் நுண்மையானது, அழகியல் சார்ந்தது. அது வாசகனை நோக்கி எழுதப்படுவது இல்லை அது எழுத்தாளனின் ஒரு அகவெளிப்பாடு.  அது தன்னிச்சையானது. அது எழுத்தாளனின் அகவயமான மனஎழுச்சியையும், தேடலையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. அவன் எழுதும் போது வாசகனை பற்றி எந்த நினைவும் அவனிடம் இருக்காது எனவே வாசகனுக்கு புரிய வைக்கும் தேவையும் அவனுக்கு இல்லை. வாசகன் அதை நோக்கி முயன்று சென்று அதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதை ஒரு வாசகன் இயல்பாக ரசிக்க முடியாது. அவனுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடைய அவனுக்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தாகவேண்டும். இத்தகைய வேறுபாட்டை வகுத்துக் கொள்ளாத ஒருவர் தீவிர இலக்கியப்படைப்பை அறியவே இயலாது. ஆயிரம் வணிக இலக்கிய நூல்களை ஒருவர் வாசித்தாலும் ஒரு  தீவிர இலக்கிய நூலை புரிந்து கொள்ள முடியாது. அது முற்றிலும் வேறு ஒன்று. கலைப் படமும் இதே வகைமையை சார்ந்ததே. தமிழில் முற்று முழுதான ஒரு கலைப்படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வந்து விட முடியாது. பார்வையாளர்கள் மிகக்குறைவு. எனவே முடிந்த வரை வணிக சாத்தியத்தை பாதிக்காமல் கலைப்படத்துக்கு மிகமிக நெருக்கமானதாகவே மணிரத்தினம் இதை எடுத்திருக்கிறார்.

எனவே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனை புரிந்து கொள்ள ஒரு கலை படத்தை பார்ப்பது எப்படி என்ற புரிதல் கட்டாயம் வேண்டும். அதற்கு விரிவான முன் தயாரிப்பும் பண்பாட்டு பயிற்சியும் வேண்டும். நான் பொன்னியின் செல்வன் போன்ற வணிக இலக்கியம் வாசிக்கும் நண்பர்களுக்கு சொல்வது ஒன்றே. தமிழ் சூழலில் புத்தகம் வாசிப்பதை காண்பது அரிது. நீங்கள் இவ்வளவு பேர் புத்தகம் வாசித்திருப்பது மகிழ்ச்சியே. நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற தீவிர இலக்கியவாதிகளையும் வாசித்து பாருங்கள். உங்களில் இருந்தும் ஒரு சில தீவிர இலக்கியவாசகர்கள் எழுந்து வரக்கூடும். 

என்னையும் சேர்த்து இங்கு தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள் எல்லோரும் உங்களில் இருந்து எழுந்து வந்தவர்கள் தான். நான் பொன்னியின் செல்வன் பற்றி தொடர்ந்து எழுதுவதன் நோக்கம் இந்த விவாதத்தை பயன்படுத்தி உங்களில் இருந்து பலரை தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்துவதே. ஆரம்பகட்டமாக வாசிக்க கூடிய தீவிர இலக்கிய புத்தக பரிந்துரை தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நானும் உங்கள் சகபயணி தான். உங்கள் இடத்தில் இருந்து தற்செயலாக கிடைத்த இலக்கிய அறிமுகம் மூலம் ஒரு சிறு அடி முன்வைத்திருகிறேன் அவ்வளவே.

நமக்குள் இப்போது நடக்கும் இலக்கிய சர்ச்சை நக்கீரர் காலத்தில் இருந்தே தமிழில் நடந்துவரும் சர்ச்சைதான். எனவே இதை தனிப்பட்ட அளவில் எடுத்து உங்கள் நட்புக்களை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என இரண்டும் தமிழுக்கு தேவையே. அடிப்புல் மேய்ந்தாலும் நுனிப்புல் மேய்ந்தாலும், தமிழ் புல் மேய்வதே தமிழுக்கு செய்யும் தொண்டு தான். எனவே அனைவரும் தொடர்ந்து மேய்க. நம்மால் தமிழன்னை பொலிக!! 

கலைப்படைப்பை விமர்சனம் செய்வது எப்படி?

மந்தாகினியின் மரணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் அந்தப் பாடலை வைத்து அக்காட்சியை இன்னும் நுண்மையாக புரிந்து கொள்ள முடியும். “இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார்” என்று தொடங்கும் பாடல் அது. கொஞ்சம் பண்பாட்டுப் பயிற்சி உள்ளவர்களுக்கு அது ஒரு சங்கப்பாடல் என்று தெரிந்திருக்கலாம். அது வெறும் இறப்பின் சோகத்தை சொல்லும் பாடல் அல்ல. அப்படி இருந்தால் அதை கரிகாலன் மரணத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும் அல்லவா? அது சாத்தன் என்ற வீரனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது அவன் மரணத்தைப் பற்றி பேசுகிறது. அப்படிப் பார்த்தால் கரிகாலனுக்கு மேலும் அணுக்கமானது. ஆனால் ஏன் இங்கு பயன்படுத்தினார்கள்? இது புரிந்தால் அந்தக் காட்சி இன்னும் ஆழமாக பொருள் கொள்ளும்.

அந்த சங்கப் பாடலது அடிநாதம் இறப்பின் சோகம் அல்ல இறப்பால் வந்த கையறு நிலை. கரிகாலன் இழப்பு கையறு நிலை அல்ல. அவன் இடத்தை நிரப்ப வீரமும் மாண்பும் நிறைந்த அருண்மொழி இருக்கிறான். ஆனால் மந்தாகினியின் மரணம் அப்படிப்பட்டதல்ல. அருண்மொழியின் உயிரையும், சுந்தரசோழனின் உயிரையும் காவல் தெய்வம் போல வந்து பலமுறை காத்தவள் அவள். இன்று அவளோ மரணித்துவிட்டாள். அவர்கள் காவல் தெய்வம் இல்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். அவளது இடம் இனி யாராலும் இட்டு நிரப்பக்கூடியது அல்ல என்று அந்தப் பயன்பாடு குறிப்புணர்த்துகிறது.

அந்த சங்கக் கவிதையை கற்று வைத்திருந்தவர்கள் மட்டும் தான் அந்த நுண்மையை புரிந்து கொள்ளமுடியும். அந்தக் காட்சி இன்னும் பலமடங்கு பொருள் கொள்ளும். நீங்கள் புத்தகத்தில் படித்த மந்தாகினியின் மரணத்தை வைத்து இதை மதிப்பிடக்கூடாது. 

இதற்கு தான் நாங்கள் சொல்கிறோம் கலைப்  படைப்பை விமர்சனம் செய்ய வாசிப்பில், ரசிப்பில், பண்பாட்டில்  பயிற்சி தேவை என. அப்படைப்பை அறிவதற்கான உண்மையான முயற்சி உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த படைப்பு கோருவதை செய்து, அதை நோக்கிச் சென்று, அதை அடைந்து, அதன் பின்னர் சொல்லப்படும்  விமர்சனங்களுக்கே மதிப்பு.  வணிக இலக்கிய, வணிக சினிமா ரசனைகளை வைத்து கலைப் படைப்புகளை மதிப்பிட கூடாது. அது ஒரு அழகிய ஓவியத்தின் முன் விழி மூடி நின்று கைகளால் தடவிப்பார்த்து கருத்து சொல்வது போன்ற அபத்தமான செயல்.

Tuesday, 2 May 2023

பொன்னியின் செல்வன் கதை மாற்றப்பட்டது தவறா ?

நாவல் படித்த பலர் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னமும் ஜெயமோகனும் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  அது உண்மையல்ல. இரண்டு விடயங்களில் தெளிவு இருக்க வேண்டும். ஒன்று நாவலும் சினிமாவும் வேறு வேறு கலை வடிவம். ஒவ்வொரு கலை வடிவுக்கும் அதற்கென்று ஒரு Grammar அதற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. எனவே ஒரு கலைவடிவத்தில் இருந்து இன்னொன்றாக அப்படியே மாற்றமுடியாது. உதாரணம் இதே பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக நடித்தால் இன்னும் வேறு விதமான மாற்றம் வரும் ஏனென்றால் மேடையிலே ஒரு frame க்குள் real-time இல் கதை சொல்லவேண்டும் எனவே அதற்கு தகுதியான கதை பகுதி மட்டும் எடுத்தாளப்படும். மீனைக் கொண்டு வந்து தரையில் விட்டுவிட்டு என்ன மீன் நீந்தவில்லை துள்ளிக் கொண்டு இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருக்ககூடாது.  

இரண்டாவது விடயம் இலக்கியம் என்னும் கலை ஆயிரம் வாசிப்புக்கு இடம் தருவது. பொன்னியின் செல்வன் கதையை வாசிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் பூ கட்டும் சேந்தன் அமுதனும் படகு ஓட்டும் பூங்குழலியும் சோழ அரியாசனத்தில் அமர்கிறார்கள் எனவே பாட்டாளி மக்கள் அரசாளும் காலம் இனி வரும். இன்று புவியாளும் அரசியல்வாதிகளும் முடிதுறந்து பாட்டாளிகள் தலையில் கீரிடம் வைப்பார்கள் என்று பூடகமாக சொல்கிறார் கல்கி அதுதான் இந்த நாவலின் உச்சம் என்று புரிந்து கொள்ளலாம். அது அவர் பார்வை அவ்வளவு தான். அப்படி ஒவ்வொருவரும் தமக்கானதாக அதை புரிந்து கொள்ள முடியும். இலக்கியத்தின் அழகே அது தான். முடிவில்லா சாத்தியத்தின் பெருவெளி. 

மணிரத்னம் இதை முதன்மையாக ஒரு காவியக் காதலாக, பின் தியாகத்தின் சிகரமாக புரிந்து கொண்டார். அதுவே கல்கி சொல்ல வருவது அது என்று நினைத்தார். எனவே ஜெயமோகன் அந்த உச்சத்தை நோக்கி கதை அமைத்தார். நாவல் என்ற வடிவம் பல திசைகளில் ஆயிரம் இதழ் விரிக்கும் ஒரு மலரைப் போல பரவமுடியும். ஆனால் சினிமா இறுதியில் ஒரு உச்சத்தை நோக்கி நகர்த்தாக வேண்டும். எனவே சேந்தன் அமுதன் ஆள்மாறாட்டம், மணிமேகலை என்று எல்லாம் தொடர்ந்து வேறு வேறு திசைகளில் திரும்பி கொண்டு இருக்கமுடியாது. அப்படி செய்தால் சினிமா என்ற கலைவடிவின் வடிவ ஒருமை கைகூடாது. எனவே காவியக் காதல், தியாகத்தின் சிகரம் நோக்கி கதை நகர்த்தப்பட்டது. காதலின் கத்தி கரிகாலன் நெஞ்சில் பாய்ந்து இறந்தான் என்பது தான் அந்த காவிய காதலில் கவித்துமான உச்சமாக இருக்க முடியும் எனவே திரைக்கதையை அப்படி கொண்டு சென்றார்கள். 

நாவலில் உள்ளது போல மக்களும் சிற்றரசர்களும் அருண்மொழிக்கு  அளித்த அரசை அவன் மதுராந்தகனுக்கு அளித்தால் அதில் அவனுடைய மாண்பென ஏதுமில்லை. இந்தப்படத்தில் அருண்மொழியே போரில் ராஷ்ட்ரகூட அரசனை வென்று சோழநாட்டை அடைகிறான். அதை மதுராந்தகனுக்கு அளிக்கையில்தான் அவனுடைய முழுமையான தியாகமும் மேன்மையும் வெளிப்படுகிறது எனவே திரைக்கதையை அப்படி கொண்டு சென்றார்கள். 

நீங்கள் எதிர்பார்ப்பது போல் பொன்னியின் செல்வனை கல்கி எழுதியதுக்கு நெருக்கமாக எடுக்கவேண்டும் என்றால் வெப் சீரிஸ் மட்டுமே சாத்தியம். சினிமா என்கிற வடிவம் அதற்கு பொருந்தாது. இது வாரம் ஒரு அத்தியாயமாக வெளிவந்தது. எனக்கு ஒவ்வொரு வாரமும் முடிவில் ஏதாவது ஒரு cliff-hanger வைக்கவேண்டும் என்பதற்காக பல திருப்புமுனைகளை கல்கி உள்ளே வைத்தார். அதே அப்படியே படமாக்க முடியாது படத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு திருப்பம் என்று வந்துவிடும். 20 நிமிடம் இல்லை 40 நிமிட எபிசொட் ஆக இது சாத்தியம்.  

பூமணியின் வெக்கை நாவல் வேறு வெற்றிமாறனின் அசுரன் வேறு. ஜெயமோகனின் ஏழாம் உலகம் வேறு பாலாவின் நான் கடவுள் வேறு. ஆங்கிலத்தில் கூட அப்படி தான். Based on என்று சொன்ன எந்த புத்தகமும் அப்படியே எடுக்கப்படவில்லை. ஏன் கிளைமாக்ஸ்  மாற்றப்படுவது கூட அரிதாக நடக்கிறது.  Dan Brown எழுதிய Inferno வேறு படமாக வந்த Inferno வேறு. இந்த படத்தை போலவே முற்றிலும் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது.

நான் கூட சேந்தன் அமுதன் முடிசூட்டல் நடக்கும் புத்தகம் படிக்காதவர்களுக்கு செம்ம ட்விஸ்ட் ஆக இருக்கும் என்று தான் நினைத்தேன். அவர்கள் கதையை எப்படி நகர்த்தி இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது அது தவிர்க்கமுடியாதது என்று புரிந்துகொண்டேன். நீங்கள் அந்த சேந்தன் அமுதன் முடிசூட்டல் அடிநாதம் என்று நினைக்கிறீர்கள். மணிரத்னம் நினைக்கவில்லை என்பது தான்  உண்மை.   

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு அழகியல் பார்வை இருக்கிறது. மணிரத்னத்தின் அழகியல் என்பது கவித்துவம் நோக்கி நகர்வது. உதாரணமாக சுந்தரசோழரிடம் அருண்மொழியை கைது செய்ய சொல்லி பழுவேட்டரையர் சொல்லும் போது, சுந்தரசோழர் முதுகில் வைத்தியர் ஊசியால் குத்தி கொண்டு இருப்பார். அவர்கள் இவர் முதுகில் குத்துகிறார்கள் என்பதை கவித்துவமாக சொல்லி இருப்பார். பழுவேட்டரையர் நந்தினியிடம் பேசவரும் போது எல்லாம் கவசங்களை பெண்கள் கழட்டிகொண்டிருப்பார்கள். அவர் அவள் முன் தன் அனைத்து கவசங்களை கழட்டிவிட்டு நிராயுதபாணியாக நிற்கிறார் என்று குறிப்புணர்த்தும் காட்சி அமைப்பு.  சிறுவயது நந்தினி தொடக்க காட்சியில் நீரில் இருந்து எழுந்து வருவாள். அவள் இறுதி காட்சியில் நீரில் மூழ்குவாள். இப்படி அந்த படத்தில் கொண்டாட எவ்வளவோ இருக்கிறது. எனவே நாம் எதிர்பார்த்த விடயம் இல்லை என்பதற்காக வருந்த தேவையில்லை. அதற்காக அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதும் காழ்ப்பை கொட்டுவதும் நிச்சயம் கூடாது.

ஒரு பேரறத்தானின் முழுமை

ஆதித்த கரிகாலனை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அவன் உளவியலை பல்வேறு முறையில் புரிந்து கொள்ளமுடியும். “கொலை வேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொரு நாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்” என்ற ஒரு ஜெயமோகனின் நாவல் வரி ஞாபகம் வந்தது. ஆம் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு கரிகாலன் ஒரு கொலை வேழம். ஆனால் உண்மையில் அவன் ஒரு பெருங்கருணையாளன். அருண்மொழி இறந்துவிட்டான் என்று பார்த்திபேந்திர பல்லவன் குறிப்புணர்த்தியவுடன் உடைந்து அவன் கன்னத்தில் அறைவான். உடனே திரும்பி ஏவலனை கைகாட்டி செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி பல்லவனிடம் கொடுப்பான். அவ்வளவு வலியிலும் கோபத்திலும் கூட நீண்ட தொலைவில் இருந்து வந்திருக்கிறான்; எனவே தாகமாக இருப்பான் என நினைத்து. பின் நீ வந்து நல்ல செய்தி சொல்வாய் என்று காத்திருந்தேனே ஏமாற்றிவிடாயே என்று சொல்வான். பல்லவன் தண்ணீரை குடிக்காமல்  அவனுக்கு பதில் சொல்ல முனைவதை பார்த்து அவனே அந்த தண்ணீர் செம்பை பல்லவன் வாயருகே கொண்டு சென்று “இம்” என்று சொல்லி குடிக்கச் செய்வான். அது தான் கரிகாலன். இப்படி அவன் பெருங்கருணையை காட்டும் பல நுண்மையான காட்சிகள் படத்தில் உள்ளது. பெரும் கருணையாளர்களே பெரும் கொடையாளர்களாகவும் இருக்கமுடியும். அதனால் தான் உத்தமசோழனுக்கு முழு சோழநாட்டையும் விட்டுக் கொடுக்கிறான்.

அவன் ஒரு கண கோபத்தில்  வீரபாண்டியன் தலையை வெட்டிய உணர்வை புரிந்து கொள்ளமுடியாத ஆண்மகன்கள் இங்கு யாரும் இருக்க முடியாது. என்னவள் என்று நினைத்த ஒருத்தி; அவன் தன் வாழ்வனைத்தும் நினைத்து உருகிய ஒருத்தி, அவன் பரம எதிரியோடு இருக்கிறாள். அவனுக்காக இவனிடம் மன்றாடுகிறாள். அவனின் ஆண் என்னும் கர்வம் முற்றாக புண்பட்ட, உடைந்து சரிந்த கணம் அது. அதனால் வந்த ஆத்திரம். அந்த இடத்தில எந்த ஆண்மகனும் கரிகாலன் செய்ததை விட வேறு எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் அவன் பெருங்கருணையாளன் என்பதால் தான் போரில் காயம்பட்டு குற்றுயிராக போராடும் ஆற்றல் அற்று விழுந்து கிடந்த ஒருவனில் தலை கொண்டது அவன் மனதில் ஆழமான குற்ற உணர்ச்சியை விதைத்துவிட்டது. அவன் தன்னையே கூசத் தொடங்கினான். தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஒரு கிழவனை மணந்து தன் நல்லியல்பெல்லாம் இழந்து சதிகாரி ஆகி தன் வாழ்வை அழித்துகொள்கிறாள் நந்தினி என்று நினைத்து நடைப்பிணம் ஆகிறான். அவன் மரணம் கூட அவன் பெருங்கருணையால் அவள் இனியாவது நிறைவாக வாழட்டும் என்று அவளுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது தான். 

ஆனால் அதை விட இன்னும் நுண்மையான ஒரு உளவியல் இருக்கிறது. பெருங்கருணையாளர் எல்லோரும் எதோ ஒரு வகையில் தன்னளவில் ஒரு நிமிர்வை உணர்வார்கள். தான் ஒரு பேரறத்தான் என்று அவர்கள் அகம் உணர்வதால் வரும் நிமிர்வு. அந்த நிமிர்வு உடைந்தது வீரபாண்டியன் கொல்லப்பட்ட விதத்தால். அவன் அந்த உடைவை தன் உயிர் கொடுத்து மட்டுமே நிகர் செய்யமுடியும். அது வேறு யாருக்காகவும் அல்ல அவனுக்காக. மார்பில் கத்தி இறங்கி உயிர் போகும் அந்த கடைசி தருணத்தில் கரிகாலன் மீண்டும் தன் நிமிர்வை உணர்த்திருப்பான். தான் ஒரு பேரறத்தான் என்ற கர்வத்தில், நிறைவில் உயிரை விட்டிருப்பான். ஆம்! அவனொரு மண் திகழ்ந்த பேரறத்தான். அவன் அவ்வாறு மட்டுமே நிறைவடைய முடியும். அவன் மரணம் என்பது ஒரு காவிய முழுமை. சித்திரை முழுநிலவில் தேவர்கள் மண்ணிறங்கும் பொழுதில் கோப்பரகேசரி வர்மன் ஆதித்த கரிகாலனுக்கு நிறைவு!🙏

Ponniyin Selvan 2

Watched PS-2 in 4DX today. I was the last to leave the theatre. I got up from my seat and stood there until the credits finished rolling. This movie deserves that gesture. This film is poetry. It is unlikely that we will witness another historical film with such profound depth, complexity, and artistic brilliance in our lifetimes. I shed tears a few times while watching the movie. Initially, I had intended to watch it again in the theatre. However, after today's experience, I prefer to preserve this memory for the rest of my life. I don't want to override that feeling by seeing it again in the theatre. 

It is not a tale focused on Chola pride, but rather a poignant and intricately crafted human drama. The film does not rely on the conventional archetypes of hero and villain but instead delves into the ambiguous and nuanced aspects of human nature. It explores how Rajaraja Chola, despite the intense turmoil surrounding him, was able to preserve his inner morality and relinquish the mighty Chola throne that many would have killed or died to retain. It is this very quality that has ensured his legacy as a people's emperor to this day.

It is understandable why some people may find it challenging to connect with PS2, as it employs a poetic and metaphorical approach to storytelling rather than a straightforward narrative. This technique may not appeal to everyone. For instance, during Manthakini's death scene, PS2 incorporates an excerpt from Tamil Sangam literature, which deepens the scene's impact. However, the meaning of the song is only apparent to those who understand it, resulting in a more profound emotional response. In fact, the entire PS2 is full of such hidden references, which may make it harder for some to fully appreciate its nuances.

Maniratnam employs subtle nuances to create poetic moments throughout the film. For example, in the opening scene, young Nandini emerges from a pool of water. In the final scene, adult Nandini is depicted drowning in a pool of water, signifying the completion of the circle of life. In another scene, Nandini accepts Karikalan's love on the riverfront, and they ride off happily on a horse. As they ride happily, there is a long shot of the river horizon where the river meets the sky. However, a few seconds later, a mountain appears in the shot, dividing the river and the sky. This symbolizes the obstacles they will face in the future, including their families' disapproval and eventual separation. These subtle nuances are present throughout the film, adding depth and meaning to the story.

As I identified several small nuances in the film, I found myself in an incredibly evocative state. I have never felt so emotionally moved while watching a movie in a theatre before. It was as though I was under a spell and completely captivated by the poetic beauty of the story. When the movie ended, I sobbed and was in shock for a couple of minutes. I realized I had just witnessed something truly extraordinary. I decided to stand up and wait until the credits finished as a gesture of respect.

PS2 offers a truly magnificent cinematic experience, where every aspect has been executed flawlessly. Overall Ponniyin Selvan represents a magnum opus in Tamil cinema, and its impact will be felt for generations to come. With meticulous attention to detail, the film brings to life the 10th century Sri Lanka and South India with remarkable vividness, seamlessly incorporating even the smallest nuances of the era into the background. The film remains firmly rooted in Tamil culture and does not compromise to cater to the wider Indian or global audience.

The film is a technical marvel, reflecting the true Chola tradition of utilizing local talent while also drawing on the expertise of internationally renowned professionals such as Simon Rhodes, the Audio Mixing & Mastering Engineer for Avatar 2, Oscar-winning sound designer Craig Mann, and popular Hollywood sound engineer Greg Townley. A brilliantly well-made film. Thank you Manirathnam, Jeyamohan, AR Rahman and Ravi Varman for this poetry. There is no doubt that this will become a cult classic in Tamil. It will stand the test of time.

The film is a testament to the desire to reclaim and celebrate the illustrious legacy of the Chola dynasty. Chola Saga E̶n̶d̶s̶ Begins #CholasAreBack