இன்று குரு பௌர்ணமி. குருவை வணங்கும் நாள். காலையில் அறிந்தோ அறியாமலோ "குரு சாகரம்" என்ற நுண் சொல்லோடு தான் விழித்தெழுந்தேன். பெருங்கடல் எனப் பொருள்படும் சாகரம் என்பது ஒன்றுதான். நாம் அறியும் குரு வடிவங்கள், அப்பெருங்கடலில் இருந்து வெளியாகி வந்து நம்மை தீண்டி, பின் மீண்டும் அதில் சென்றமையும் வெறும் அலைகள் மட்டுமே. அலை அலையாக வந்து கொண்டே இருக்கக்கூடிய பல்வேறு மனிதர்கள் வழியாக, மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும், அந்த குருப் பெருங்கடலாகிய இரண்டற்ற ஒன்றுக்கு என்றும் என் வணக்கம் 🙏.
No comments:
Post a Comment