கந்தர் அநுபூதியில் இருந்து ஒரு பாடல் தற்செயலாக என் கண்ணில் பட்டது. "பணியா? என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே" என்ற ஒரு வரிய படிச்சவுடன் என் திருமணமான நண்பர்கள் எல்லாம் ஞாபகம் வந்தார்கள். முருகன் வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று கெஞ்சுகிறான். ஆனானப்பட்ட முருகனுக்கே அந்த நிலைமை என்றால் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன் ஒரே சிரிப்பு சிரிப்பா வந்திருச்சு 😂🙊 அப்புறம் எனக்கும் நாளைக்கு இந்த நிலைமை தான் என்று ஒரு எண்ணம் வந்தது உடனே இன்னும் சிரிப்பு வந்துவிட்டது😁
No comments:
Post a Comment