இரவுமழை!
இரவுமழையிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்
உன் துயரத்தின் இசையை நான் அறிகிறேன்
உன் கருணையும்
அடக்கிக் கொண்ட சீற்றமும்
இருளில் உன் வருகையும்
தனிமையின் விம்மல்களும்
விடியும்போது முகம்துடைத்து
திரும்பிச் செல்லும் உன் அவசரமும்
ரகசியப் புன்னகையும் பாவனைகளும்
எனக்குத் தெரியும்
எப்படி அறிகிறேன் என்கிறாயா
தோழி!
நானும் உன்னைப் போலத்தான்.
இரவுமழை போலத்தான்.
- மலையாளக் கவிஞர் சுகதகுமாரி
No comments:
Post a Comment