மைனாக்கள் கவிதைகள் பாடுகின்றன
தாழைமடல்கள் ஆனந்த நடனமிடுகின்றன
கனவுகளெல்லாம் கதிராக
என்றும் என் துணைவியாக
வரமளிப்பவளே, நீ அனுமதியளிக்க மாட்டாயா?
நீ அனுமதியளிக்க மாட்டாயா?
காதல்கொண்டவளே இதோ
என் இதயத்தில் விரிந்த மலர்கள்
ஒரு ராக மாலையாக இதை
உன் உயிரில் அணிவாயாக
அணிவாயாக விழைவின் முழுநிலவே!
ஏரியின் காலைக் கீதங்களை
கேட்கும் இந்த பனிமுகில்கள்
நிறம் பூசிய மேடையில்
குளிர் அலையும் சுபவேளையில்
பிரியமானவளே! என் மோகத்தை நீ அறிந்தாய்
என் மோகத்தை நீ அறிந்தாய்
No comments:
Post a Comment