மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?
- கம்பன்
மத்தை வெச்சுத் தயிர் கடையும் போது, தயிர் நுரைச்சு பாத்திரத்தோட ஒரு பக்க விளிம்புக்கு போயிடுமாம். உடனே மத்து இன்னொரு பக்கம் போய் அதை அப்படியே பாத்திரத்துக்குள்ள தள்ளிடுமாம். அதே மாதிரி உன் நினைவுகளாகிய மத்து கடையுறப்போ, உயிர் போகவும் போகாம உள்ளையும் நிக்க முடியாம தத்தளிக்கிறது. ஐந்து புலன்களும் தடுமாறும் பித்து நிலையும், உன் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமா?
யோவ்! கம்பரே யார்ரா நீ 👏🙏
No comments:
Post a Comment