Saturday, 14 January 2023

காலமெல்லாம் நாம் இருப்போம்

எனக்கு கண்ணீரை வரவழைத்த புத்தகம்😭 தமிழ் எனும் முதுபெருந் தாயின் எஞ்சி நிற்கும் பிள்ளைகளுக்கு உலகின் மனச்சாட்சி நோக்கி சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை, அவள் கரங்களை இன்னும் இறுகப் பற்றி கொள்வதை தவிர. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் எத்தனை பேர் முயன்றும் வீழ்த்தமுடியா அன்னைப் பெருமரம் அவள்.  காலம் உள்ளவரை அவள் இருப்பாள். அவள் கை பிடித்திருக்கும் வரை நாம் இருப்போம். ஆம், அவ்வாறே ஆகுக!


பி.கு - நான் மேலே எழுதியதை இப்போது வாசிக்கும் போது எனக்கே வியப்பாக இருக்கிறது. நான் இவ்வளவு சொல் தேர்ந்து எழுதுபவன் இல்லை. சொல்லில் தெய்வம் எழும் கணம் என ஒன்றுண்டு.  அத்தெய்வம் எழுந்து சொன்ன சொல்லாகவே இதைக் கொள்கிறேன். எண்ணிச் சொல்லும் சொல் கொல்லும் என்று நம்பும் மரபு நம்முடையது. நந்திவர்ம பல்லவனை அவன் சகோதரன் அறம்பாடிக் கொன்றான் என்கிறது நம் தொல்வரலாறு. அறம் ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! மீறமுடியாத அறுதியான நெறி அது. அறம் எழுக! ஆம், எழுக! எது அறமோ, அது திகழ்க!

No comments:

Post a Comment