Sunday, 12 February 2023

என் மௌனங்கள் தேடும் சங்கீதம்

 

நான் உன் கண்களின் கதவுகளை மூட வைத்த
நாணத்தை  மெல்ல  வருடவே
இனிமேல், நீ என்றென்றும் என்னுடன் இருப்பாய்;
எனக்கு ஒளி கொடுக்க, ஓ திங்களே.

ஒவ்வொரு சிறிய சோகங்களையும் சிரிப்பாய் மாற்றும்
எனது பாதித்  துணையே!
ஒவ்வொரு இரவையும் பகலாய் ஆக்கும்
எனது உண்மைக் கதிரொளியே. 

நீ இவன் உயிரின் துணை
வண்ணமயமான கைரேகை போல.
நான் உன்னை இமைக்காமல் காப்பேன் என்னவளே

இந்த நீல விழியின் ஆழங்களில் நான்
உருகினேன் எனை அறியாமலே 

நீ என்னை வாழ்க்கையை தழுவி கொள்வாயா
என் சுவாசங்கள் நீங்கும் போதும் ?
என் மௌனங்கள் தேடும் சங்கீதமே.

No comments:

Post a Comment