Thursday 8 June 2023

Review: மலர்த்துளி: 12 காதல் கதைகள் [Malarthuli]

மலர்த்துளி: 12 காதல் கதைகள் [Malarthuli]மலர்த்துளி: 12 காதல் கதைகள் [Malarthuli] by Jeyamohan
My rating: 4 of 5 stars

ஜெயின் மற்ற கதைகளில் இல்லாத எளிமை இதில் கைகூடியிருக்கிறது. ஜெயின் கதைகளில் பொதுவாக உள்ள அலையலையென விரியும் உள்மடிப்புகள், எதிர்பாராத நுட்பங்கள் ஏதும் இல்லை. இந்த மனநிலையோடு இந்த கதைகளைப் படிப்பது அவசியம். இது எளிய கதைகள் என்று ஜெ முன்னுரையில் சொல்லி இருந்தாலும் முதல் கதையை வாசித்தவுடன் குழம்பிப் போனேன். இது ஜெ கதை போல் இல்லையே. ஜெ அப்படியெல்லாம் நினைத்தாலும் எளிய கதைகளை எழுத முடியாது அவரையும் தாண்டி சில உள்மடிப்புகள் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை. உடனே ஒரு வேளை எனக்குத் தான் கதையின் உள்மடிப்புகள் புரியவில்லையா என்று என் வாசிப்பின் மேல் கோபம் வந்தது. புத்தகத்தைத் தூக்கி வைத்துவிட்டேன். புத்தகத்தைத் திருப்பிப் படிப்பதை நினைக்கவே எரிச்சலாக இருந்தது. பின் முதல் கதையை மீண்டும் படிக்க வேண்டாம். இரண்டாம் கதையான "கருவாலி" இருந்து தொடங்குவோம் என்று முயன்றேன். கருவாலி கதை விறுவிறுப்பாகச் செல்லும் போது காதல் தோன்றும் ஒரு கணத்தில் சட்டென முடிந்துவிட்டது. ஒரு கணம் ஒரு குறிப்புணர்த்தல் மட்டும் தான்.

இந்த தொகுப்பின் கதைகள் எல்லாம் அப்படி காதலில் கணத்தைத் தான் சொல்லிச் செல்கிறது. இருவருக்குள் காதல் எப்படித் தோன்றுகிறது என்பது எப்போதும் யாராலும் புரிந்து கொள்ளமுடியாத விந்தைதான். ஒரு கணம் அவ்வளவு தான். அதற்கும் தர்க்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. காதல் தோன்றிய பின் நாம் அதைத் தர்க்கத்தை வைத்து விளக்கிக் கொள்கிறோம். காதலில் ரகசியங்களை, தவிப்புகளை, பாவனைகளை, பரவசங்களை நுண்மையாகச் சுட்டி செல்லும் கதைகள் இவை. இந்த சிறுகதை தொகுதி ஒரு ஒரு மயிலிறகின் வருடல். ஒரு இனிமையான கனவு கண்ட நிறைவு.

View all my reviews

No comments:

Post a Comment